புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் எதிர் பாராதவிதமாக தோல்வியடைந்தது. இந்திய மண்ணில் ஆஸ்தி ரேலியா அணி முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இப்போட்டி புது டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் பூவா தலையாவில் வென்று பந்தடிப்பைத் தேர்வு செய்தார். அந்த அணியின் உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கை 76ஆக இருந்த போது ஆரோன் பிஞ்ச் 27 ஓட்டங் களை எடுத்து வெளியேறினார். அடுத்து கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்காம்ப் களமிறங்கினார். இந்த இணை அபாரமாக விளை யாடியது. 102 பந்துகளில் 10 பவுண்டரி, இரு சிக்சருடன் கவாஜா சதம் அடித்தார். இந்தத் தொடரில் இது அவரின் இரண் டாவது சதமாகும். அவர் 104 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடித்த ஹேண்ஸ்ட் காம்ப் 52 ஓட்டங்களில் வெளி யேறினார். இறுதியில், ஆஸ்தி ரேலியா ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ஓட்டங்களைச் சேர்த்தது.
கிரிக்கெட்: இந்திய மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா
1 mins read
கோஹ்லி வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மார்கஸ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி -

