மேன்சிட்டியுடன் மூன்றாண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்ட சில்வா

லண்டன்: போர்ச்சுகலைச் சேர்ந்த மத்தியத் திடல் ஆட்டக்காரர் பெர்னார்டோ சில்வா (படம்), மான்செஸ்டர் சிட்டி உடனான தமது எதிர்காலத்தை உறுதி செய்துள்ளார். 2025ஆம் ஆண்டு வரை நடப்பில் உள்ள மூன்றாண்டு உடன்பாட்டில் அவர் கையெழுத்திட்டதை அக்குழு நிர்வாகம் நேற்று முன்தினம் உறுதி செய்தது. 
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ள சிட்டி எடுத்துவரும் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் 24 வயது சில்வா. இப்பருவத்தில் சிட்டிக்காக அனைத்துப் போட்டிகளிலும் 40 ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். ஈராண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு குழுவான மொனாக்கோவிலிருந்து 43 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான உடன்பாட்டின் மூலம் சிட்டியில் சேர்ந்தார் அவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்