ஆஸி. அணி பயிற்றுவிப்பாளர்: எல்லா புகழும் எமது வீரர்களைச் சேரும்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடியதுபோல இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்குமுன் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியிருந்தது. தற்போது தனது சொந்த மண்ணில் தொடரை அது இழந்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது குறித்து லாங்கர் கூறுகையில், “எல்லாப் புகழும் ஆஸ்திரேலிய வீரர்களைச் சேரும். நாங்கள் ஒரு போட்டிக்கு எப்படி தயாராவோமோ அதேபோல்தான் தயாரானோம். ஆனால் எங்கள் வீரர்கள் முக்கியமான சூழ்நிலைகளியில் சிறப்பாக விளையாடினர்,” என்றார்.