ஐரோப்பா லீக்: அடுத்த சுற்றுக்கு இங்கிலி​ஷ் குழுக்கள் தகுதி

இன்று அதிகாலை நடந்த ஐரோப்பா லீக் காற்பந்து போட்டி ஆட்டங்களில் இங்கிலி​ஷ் குழுக்களான செல்சியும் ஆர்சனலும் வெற்றி கண்டுள்ளன.

செல்சி அணி யுக்ரேனின் டைனமோ கியவ் குழுவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இவ்வாட்டத்தில் செல்சி ஆட்டக்காரர் ஒலிவியே ​​​ஷெரூ மூன்று கோல்களைப் புகுத்தி குழுவைக் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறச் செய்தார்.

போட்டியின் கால்இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற மற்றோர் இங்கிலி​ஷ் குழுவான ஆர்சனல், பிரெஞ்சு குழுவான ரென் குழுவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆர்சனலின் இரண்டு கோல்களை நட்சத்திர முன்னணி ஆட்டக்காரர் உபமயாங் புகுத்தினார்.  

இப்பகுதியில் மேலும் செய்திகள்