சுடச் சுடச் செய்திகள்

சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்று: யுனைடெட்டுக்கு சோதனை

நியோன்: சாம்பியன்ஸ் லீக் காலிறு திச் சுற்றில் எந்தக் குழுவை சந் திக்கப் போகிறோம் என்ற ஆவலுடன் உலக காற்பந்து ரசிகர்கள் காத் திருக்க, முடிவுகள் நேற்று வந்ததும் இங்கிலாந்தின் மான் செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் கையைத் தலையில் வைத்துக் கொண்டனர். காலிறுதிச் சுற்றில் மான்செஸ் டர் யுனைடெட் ஐரோப்பிய ஜாம்ப வானான பார்சிலோனாவை சந்திக் கவுள்ளது. இதுவரை இவ்விரு குழுக்களும் மோதிய கடைசி 8 ஐரோப்பிய போட்டி ஆட்டங்களில், மான்செஸ்டர் யுனைடெட் குழு ஒருமுறை மட்டுமே பார்சிலோனா குழுவை வென்றிருப்பது குறிப் பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக பிரெஞ்சு நட்சத்திர அணியான பிஎஸ்ஜி குழுவை வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடெட் அடுத்ததாக உலகளா விய நட்சத்திர ஆட்டக்காரர்களை உள்ளடக்கும் மெஸ்சி, சுவாரெஸ் போன்றவர்களைச் சமாளிக்க வேண்டும். சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்று போட்டிகளுக்கான குலுக்கல் முறை தேர்வு நேற்று சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் நடந்தது. இதில் போட்டிக்கான நல்லெண்ணத் தூதராகக் கலந்துகொண்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கோல் காப்பாளர் ஜூலியோ சீசர், லிவர்பூல் அணியின் தேர்வு முடிவு அட்டையைக் காண்பிக்கிறார். படம்: ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon