யூரோப்பா லீக்: தொடரும் இங்கிலாந்தின் ஆதிக்கம்

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த நான்கு முக்கிய குழுக்கள் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த் துள்ள நிலையில், யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியிலும் இங் கிலாந்துக் குழுக்களின் ஆதிக்கம் தொடர்கிறது. முதலில் நேற்று அதிகாலை தனது எமிரேட்ஸ் மைதானத்தில் பிரான்சின் ரென்னேஸ் குழுவை எதிர்கொண்ட ஆர்சனல் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் ரென்னேஸ் குழுவைப் பந்தாடியது. இத்தனைக்கும் இதன் முதல் சுற்று ஆட்டத்தில் 1-3 எனத் தோல்வி கண்டது

ஆர்சனல். ஆனால், சளைக்காமல், தோல்விப் பயம் இன்றி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் களமிறங்கிய ஆர்சனல் இறுதியில் ஒபமயாங் இரண்டு கோல்கள் போட ஆட்டத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு 4-3 என்ற மொத்த கோல் எண் ணிக்கையில் வென்றது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஐரோப்பிய காற்பந்துப் போட்டி களில் இதுவரை காலிறுதிவரை சென்றிராத ரென்னேஸ் குழு பெருந்திரளான ரசிகர்களுடன் ஆர்சனலின் மைதானத்துக்கு படையெடுத்தது. எனினும், இது அதற்கு சாதகமாக அமைவதற்குப் பதிலாக ஆர்சனலின் எமிரேட்ஸ் மைதானம் அதற்கு அச்ச உணர்வை ஏற் படுத்தியதாக பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.