ஐபிஎல் 2019ல் ஹர்திக் பாண்டியா

சென்னை: ஐபிஎல் தொடரின் 12வது பருவம் இம்மாதம் 23ஆம் தேதி சென்னையில் தொடங்க விருக்கிறது. கடந்த பருவ ஆட் டத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிவம் மவி, கம்லேஷ் நகர் கோடி ஆகியோர் இடம்பெற் றிருந்தனர். இந்த இருவரும் காய மடைந்து ஓய்வில் உள்ளனர். இதனால் இந்தப் பருவ ஆட் டத்தில் இவர்களால் பங்கு கொள்ள முடியாது. இதனால் நைட் ரைடர்ஸ் அணியில் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடருக் கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். அவர் தற் போது உடல் தகுதி பெற்று விட்டதால் மும்பை அணிக்காக களம் இறங்குகிறார்.