பட்டியலில் முதலிடத்திற்கு திரும்ப லிவர்பூலுக்கு வாய்ப்பு

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) பட்டியலில் முதல் இடத்திற்குத் திரும்ப லிவர்பூலுக்கு இன்று கிடைக்கவுள்ள வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு நிர்வாகி யர்கன் கிளோப் தமது ஆட்டக்காரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது லிவர்பூலைவிட கூடு தலாக ஒரு புள்ளி பெற்று பட்டி யலில் முதலிடம் வகிக்கும் மான்செஸ்டர் சிட்டி, எஃப்ஏ கிண்ணக் காலிறுதிச் சுற்றில் நேற்று அதிகாலை சுவான்சி சிட்டி யுடன் பொருதியது. 
இந்நிலையில், இன்றிரவு நடை பெறவுள்ள இபிஎல் ஆட்டத்தில் ஃபுல்ஹம் குழுவை லிவர்பூல் வென்றால், லீக் பட்டியலில் மேன் சிட்டியைவிட இரு புள்ளிகள் கூடு தலாக பெற்று அக்குழு முதல் இடத்திற்குத் திரும்பிவிடும்.
எனினும், பட்டியலில் இரண் டாவது கடைசி இடத்தில் உள்ள ஃபுல்ஹம், இடைக்கால நிர்வாகி ஸ்காட் பார்க்கரின்கீழ் எந்தவொரு நெருக்குதலுமின்றி விளையாடி வருவதால் அக்குழுவைக் குறைத்து எடைபோட வேண்டாம் என்று கிளோப் எச்சரித்துள்ளார்.
“பிரிமியர் லீக்கிலிருந்து ஃபுல்ஹம் வெளியேறுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இனி காற்பந்தை ரசித்து விளை யாடுவதிலும் புள்ளிகளைப் பெறு வதிலும் அக்குழு கவனம் செலுத்தக்கூடும்,” என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் அவர் கூறினார்.
நடப்பு பருவத்தில் இவ்விரு குழுக்களும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. எனினும், லிவர்பூலுக்கு அந்த ஆட்டம் எளிதான ஒன்றல்ல என்று கிளோப் நினைவுகூர்ந்தார்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பயர்ன் மியூனிக் குழுவை அதன் சொந்த மண்ணில் 3-1 எனும் கோல் கணக்கில் வென்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள லிவர்பூல், ஃபுல்ஹம் அரங்கில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்திற்கு தன்னம்பிக்கையுடன் தயாராகி வருகிறது.