எஃப்1: முதல் நிலையில் தொடங்கும் ஹேமில்டன்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறவுள்ள ஃபார் முலா 1 கார் பந்தயத்தைக் கடந்த பருவ வெற்றியாளர் லூவிஸ் ஹேமில்டன் முதல் நிலையில் இருந்து தொடங்கவுள்ளார். 
சாதனை அளவாக 1 நிமிட 20.486 வினாடிகளில் தகுதிச் சுற்றை அவர் முடித்தார்.
ஆஸ்திரேலிய ‘கிராண்ட் பிரீ’யில் எட்டாவது முறையாக அவர் முதல் நிலையில் தொடங்கு கிறார்.
அவருக்கு அடுத்த நிலையில் சக மெர்சிடிஸ் ஓட்டுநரான வல்த்தேரி போட்டாஸ் வந்தார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிட 20.598 வினாடிகள்.