சுடச் சுடச் செய்திகள்

டெஸ்ட் போட்டி ரத்து, நாடு திரும்பிய பங்ளாதேஷ் அணி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் முக்கிய நகர்களில் ஒன்றான கிறைஸ்ட்சர்ச்சின் இரு பள்ளி வாசல்களில் நேற்று முன்தினம் அரங்கேற்றப்பட்ட கொடூர துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயர் தப்பிய பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் பாது காப்பாக நாடு திரும்பினர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக் காக திரண்டிருந்தபோது இந்தப் பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது. 
பள்ளிவாசலுக்குள் புகுந்து துப்பாக்கிக்காரன் ஒருவன் சரமா ரியாக சுட்டதில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தொழுகைக்காக பள்ளிவா சலுக்குச் செல்லவிருந்த பங்ளா தேஷ் கிரிக்கெட் வீரர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது பற்றிய தகவல் அறிந்து அங்கே செல்வதைத் தவிர்த்தனர்.
பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்யணம் மேற் கொண்டு விளையாடி வருகிறது. பங்ளாதேஷ், நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில் பயங்கரவாதச் சம்பவத்தின் காரணமாக டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது.
அதற்கு முன்பாக அணியின் பந்தடிப்பாளர் தமீம் இக்பால் செய்தியாளர்களிடம் பேசினார்.
“இந்தச் சம்பவத்தில் வங்காள தேச வீரர்கள் அனைவருமே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். என்னால் இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் தற்போது ஹோட்ட லில் நலமாக உள்ளோம்.
“சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம்தான் நாங்கள் இருந்தோம். இது ஒரு மோசமான, பயங்கரமான அனு பவம் ஆகும். எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை,” என்று அவர் சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon