தப்பிப் பிழைத்த லிவர்பூல்

லிவர்பூல் அணியின் ஆட்டக்காரர் சாடியோ மானேயின் ஒரு கோலும், மற்றொரு கோலுக்கு அவர் அளித்த முக்கிய பங்கும் நேற்று லிவர்பூலுக்கு வெற்றியைக் கிட்டித் தந்தது.

ஃபுல்ஹம் காற்பந்து குழுவைச் சந்தித்த லிவர்பூல், 2-1 என்ற கோல் கணக்கில் வென்று பிரிமியர் லீக் பட்டியலின் முதலிடத்திற்கு மீண்டும் உயர்ந்தது.  

நேற்றைய ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் லிவர்பூலின் ஆட்டக்காரர் ஜேம்ஸ் மில்னர் எடுத்த ‘பனால்டி’ வெற்றி கோலாக அமைந்தது.

கடந்த 11 ஆட்டங்களில் சாடியோ மானே 11 கோல்கள் அடித்து லிவர்பூலின் முக்கிய ஆட்டக்காரராகத் திகழ்ந்து வருகிறார்.

இதுவரை லிவர்பூல் விளையாடிய 31 பிரிமியர் லீக் ஆட்டங்களில் 76 புள்ளிகளைத் திரட்டியுள்ளது. ஃபுல்ஹம் குழு 17 புள்ளிகளோடு தற்போது பட்டியலின் இறுதி இடத்திற்கு முந்திய இடத்தில் உள்ளது.