திடலில் நிலைகுலைந்த ஆர்சனல் கோல்காப்பாளர்

நேப்பல்ஸ் நகரில் உள்ள சான் பாவ்லோ விளையாட்டரங்கில் இத்தாலியக் காற்பந்து லீக்கில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் நேப்போலி-உடினேசி குழுக்கள் மோதின. ஆட்டத்தின் ஏழாம் நிமிடத்தில் உடினேசி வீரர் புசெட்டோவுடன் மோதியதால் தலையில் காயமுற்ற நேப்போலி கோல்காப்பாளர் டேவிட் ஒஸ்பினா, அதற்காகச் சிகிச்சை பெற்று தலையில் கட்டுப் போட்டபடி தொடர்ந்து ஆடினார். ஆனாலும், முற்பாதி முடிய சில நிமிடங்களே இருந்தபோது அவர் திடலில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆர்சனல் கோல்காப்பாளரான கொலம்பியாவின் ஒஸ்பினா, இப்பருவத்தில் நேப்போலிக்குக் கடனாகத் தரப்பட்டுள்ளார். இந்த ஆட்டத்தில் நேப்போலி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. படம்: ராய்ட்டர்ஸ்
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சிக்காக ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலைவிட்டு வெளியேறும் இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jul 2019

சிங்கப்பூர் வந்தது இன்டர் மிலான் குழு