மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து லீக் போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ரியால் பெட்டிஸ் குழுவை அது 4=1 எனும் கோல் கணக்கில் பந்தாடியது. பார்சிலோனா அணித் தலைவரும் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி மூன்று கோல்களைப் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு வித்திட்டார். பார்சிலோனாவின் மற்றொரு கோலை சுவாரேஸ் போட்டார். 82வது நிமிடத்தில் ரியால் பெட்டிஸ் அணியின் லோரென் மொரோன் தமது குழுவுக்காக ஆறுதல் கோல் போட்டார்.
மெஸ்ஸி ஹாட்ரிக்: வாகை சூடிய பார்சிலோனா
1 mins read
பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ் -

