ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட் டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவை வென்ற யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ வெற்றி மிதப்பில் காட்டிய ஒரு சைகை அவரை சிக்கலில் தள்ளியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் 16  குழுக்கள் பங்கேற் கும் தகுதி ஆட்டங்களின் முதல் சுற்று ஆட்டத்தில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் அட்லெட்டிகோ மட்ரிட் வென்றது. 
அவ்வமயம், அட்லெட்டிகோ மட்ரின் நிர்வாகி டியேகோ சிமியோனே ரசிகர்கள் பக்கம் திரும்பியபடி தமது அந்தரங்கப் கையைக் கொண்டுசென்று சைகை காண்பித்தார்.
அதை சைகையை இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவை 3-0 என வீழ்த்தி அடுத்த காலிறுதிக்கு சுற்றுக்கு யுவென்டஸ் தகுதி பெற்றதை கொண்டாடும் விதமாக ரொனால்டோ காட்டினார்.
இதைத் தொடர்ந்து அவர் முறைதவறி நடந்துகொண்ட தாகக் கூறி ஐரோப்பிய காற்பந்து சங்க மான யூஃபோ தற்பொழுது ரொனால்டோ மீது குற்றம் சுமத்தி யுள்ளது.
முன்னதாக, சிமியோனே காட்டிய சைகைக்காக யூஃபா அவருக்கு 20,000 யூரோக்கள் அபராதம் விதித்தது.
ரொனால்டோ மீதான குற்றச் சாட்டு குறித்து யூஃபா நாளை முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.