‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’

சென்னை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். இந்தியா வில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத் தின்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டத் தில் நோபால் வீசினார். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
அதன்படி டி20 அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் வாய்ப்பை இழந்தார். அதேபோல் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற வெற்றியாளர் கிண் ணத் தொடரின் இறுதிப் போட்டி யில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடவில்லை. அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அதே காலக்கட்டத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் குல்தீப் யாதவ் மற்றும் சகல் ஆகியோர் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித் தனர். உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இருவரும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அணியில் வாய்ப்புக் கிடைக்காவிடிலும் உள்ளூர் தொடர்களில் அஸ்வின் விளை யாடி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட இருக்கிறார்.