‘இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடு வழங்கிவிட்டோம்’

கராச்சி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கு இடையிலான போட்டித் தொடரில் விளை யாடவில்லை. எனவே இந்தப் போட்டித் தொடர்கள் நடைபெறாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு நஷ்ட ஈடாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ரூ.481 கோடி வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த ஆண்டு அனைத்துலக கிரிக்கெட் கவுன் சிலின் தீர்ப்பாயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஐசிசி தீர்ப் பாயக் குழு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இழப்பீட்டுத் தொகை ரூ.11 கோடியை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி தெரிவித்துள்ளார்.