காம்பீர்: மக்கள் ஆதரிக்க வேண்டும்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதி ராக நிபந்தனையற்ற தடை விதிக்க முடியாது. இதுகுறித்து பிசிசிஐ முடிவு எடுக்க வேண் டியது அவசியம். ஒன்று பாகிஸ் தானுக்கு எதிராக எந்தவொரு போட்டியிலும் விளையாடக் கூடாது அல்லது அவர்களை எதிர்த்து விளையாடக் கதவை திறந்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்பீர். 
“பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ண ஆட்டத்தை புறக்கணிப்பது கடினம் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். ஆனால், நாம் பாகிஸ் தானுக்கு எதிராக இருநாடு களுக்கு இடையிலான தொடரில் விளையாடுவதில்லை. அதே போல் ஆசிய கிண்ண ஆட் டத்திலும் விளையாடாமல் இருக்க முடியும். இது சிறந்த முடிவாகும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடா மல் இரண்டு புள்ளிகளை இழப்ப தில் எந்தத் தவறும் இல்லை. 40 உயிர்களை இழந்திருப்பது மிக வும் முக்கியமானது. என்னு டைய பார்வையில், பாகிஸ் தானுக்கு எதிராக இந்தியா விளையாடாது என்று முடிவு எடுத்துவிட்டால், நாட்டு மக் களும் அணிக்கு ஆதரவளிக்க வேண்டும். இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டும் என்றாலும், அதை புறக்கணிக்க வேண்டும். மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்,” என்றார் காம்பீர்.