சுடச் சுடச் செய்திகள்

ரிஷப் பன்ட்: டோனியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் பந்தடிப்பாளராகத் திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது டோனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் காப்பாளர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழும் எம்எஸ் டோனி, விக்கெட் காப்பாளர் பணியில் துல்லியமாக செயல்படக் கூடியவர். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஸ்டம்பிங் செய்யும் வல்லமை படைத்தவர். அவருக்குத் தற்போது 37 வயதாகிறது. டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் டோனி இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் டோனி விளையாடினார். கடைசி இரண்டு போடடிகளிலும் ரிஷப் பந்த் இடம்பிடித்தார். அப்போது காப்பாளர் பணியில் ரிஷப் பன்ட் திணறினார்.
இதனால் ரசிகர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதற்கிடையே எம்எஸ் டோனியுடன் ரிஷப்-ஐ ஒப்பிடக்கூடாது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரிஷப் பந்தும் அதே கருத்தை வெளிப் படுத்தியுள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில், “நான் டோனியுடன் அதிக அளவு ஒப்பிட்டுப் பேசப்பட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஒரு விளையாட்டு வீரராக அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளவே விரும்புகிறேன். டோனி கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் ஆவார்,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon