புதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் இந்திய கிரிக்கெட் வாரியம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் இப்போதைய பயிற்று விப்பாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் உலகக் கிண்ணப் போட்டிகளுடன் முடிவடைய இருக்கிறது.
இதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய பயிற்றுவிப்பாளரை நிய மிக்கக்கூடும் என்றும் அதற்கான விளம்பரம் கூடிய விரைவில் வெளியாகலாம் என்றும் ‘ஈஎஸ் பிஎன் கிரிக்இன்ஃபோ’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக, சச்சின் டெண் டுல்கர், சௌரவ் கங்குலி, விவி எஸ் லட்சுமண் ஆகியோர் அடங் கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உதவியை பிசிசிஐ நாடும் எனக் கூறப்படுகிறது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து, நேர்காணல் நடத்தி, பொருத்த மான நபரைத் தேர்வுசெய்யும் பொறுப்பு அம்மூவர் குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரி கிறது.
உலகக் கிண்ணப் போட்டி களுக்குப் பிறகு ஜூலையில் இந்திய அணி வெஸ்ட் இண் டீசுக்குச் சுற்றுப்பயணம் மேற் கொள்ளவுள்ளது. அந்தத் தொட ருக்கு மட்டும் ரவி சாஸ்திரி தலைமையிலான பயிற்றுவிப்பாளர் குழுவின் பதவிக்காலம் நீட்டிக் கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சய் பாங்கர் (பந்தடிப்பு), பரத் அருண் (பந்துவீச்சு), ஆர் ஸ்ரீதர் (களக்காப்பு) ஆகியோர் இப்போதைய பயிற்றுவிப்பாளர் குழுவில் இடம்பெற்றிருக்கும் மற்ற மூவர்.