‘சிங்கத்தின் கர்ஜனை’

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்தி ருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பற்றிய ‘‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவண, நாடக காணொளி நேற்று வெளியிடப் பட்டது.
தலா 20 நிமிடங்கள் என ஐந்து பாகங்கள் கொண்ட இந்தக் காணொளியில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யின் கதையை விவரிக்கிறார் அந்த அணியின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான மகேந்திர சிங் டோனி.
கபீர் கான் இயக்கத்தில் வெளி யாகியுள்ள இந்தக் காணொளித் தொடர், ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி இரு பருவங் களுக்கு இடைநீக்கம் செய்யப்படு வதில் இருந்து தொடங்குகிறது.
இருந்தாலும், தங்கள் மீது ரசி கர்கள் வைத்திருந்த நம்பிக்கையே மூன்றாம் முறையாகக் கடந்த பரு வத்தில் சென்னை அணி வெல்ல முக்கிய காரணம் என மனம் திறந்து பேசியுள்ளார் டோனி.
‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்ற வாசகத்துடன் ஈராண்டு தடைக்குப் பிறகு கடந்த ஆண்டில் மீண்டும் அடியெடுத்து வைத்த சென்னை அணி, கிண் ணத்தைக் கைப்பற்றி, ‘தந்தையர் படை’ எனத் தங்களை எள்ளி நகையாடியவர்களின் மூக்கை உடைத்தது.
தமக்கும் சென்னை அணிக்கு மான பந்தம் குறித்துப் பேசிய டோனி, “எனக்கான ஐபிஎல் அணியை நான் தேர்வு செய்ய வில்லை. இது, பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் போன்றது,” என்றார்.