ஐபிஎல்: சிஎஸ்கேயின் முக்கிய வீரர் விலகல்

ஐபிஎல் போட்டியில் நடப்பு வெற்றியாளர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இருந்தும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தும் காயம் காரணமாக இரு முக்கிய வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்னரே விலகியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் 12வது ஐபிஎல் போட்டி நாளை தொடங்குகிறது. 
முதலாவது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.
2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி யில் பெரும்பாலான வீரர்களை மாற்றவில்லை. இரு வீரர்கள் மட் டுமே எடுக்கப்பட்டனர். சிஎஸ்கே அணியில் கடந்த பருவத்தில் பந்துவீச்சில் மாபெரும் தூணாக விளங்கியவர் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி.
தற்போது தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையே டி20 போட்டித் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி யின்போது, பந்துவீசிய சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள லுங்கி இங்கிடிக்குத் தோள்பட்டை யில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவர் பந்துவீசுவதை நிறுத்தி ஓய்வெடுத்தார்.
அதன்பின் மருத்துவமனைக் குச் சென்று ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், அவருக்குத் தோள் பட்டையில் தசைநார் காயம் ஏற் பட்டது தெரியவந்தது. 
இந்தக் காயம் சரியாக குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் இங்கிடியிடம் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்

இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தின் இத்தாலிய லீக் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் யுவென்டஸ் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள் (இடமிருந்து) யுவான் குவட்ரடோ, பிளேஸ் மட்விடி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, எம்ரி கேன். படம்: ஏஎஃப்பி

22 Apr 2019

ரொனால்டோ வரலாற்றுச் சாதனை