டிராவிட்: ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஓர் எச்சரிக்கை மணி

மும்பை: சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்த தால் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கவனமாக இருக்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்ப வான் ராகுல் டிராவிட்  (படம்) எச்சரித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவில் சுற் றுப்பயணம் மேற்கொண்ட ஏரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி யது. டி20 தொடரை 0-2 என இழந்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 2-3 எனத் தோல்வி அடைந்தது. இந்திய மண்ணில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று ஆஸ்திரேலிய அணி சாதனைப் படைத்தது.
இதுகுறித்து அவர் கூறுகை யில், “இந்திய அணி வீரர்கள் நேரடியாக நடந்து சென்று உலகக் கிண்ணத்தை  வென்றுவிட முடியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு நல்ல பாடத்தை நினைவு படுத்தி உள்ளது. அதனால் இளம் வீரர்கள் அதிக கவனமாக செயல்பட வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கிண் ணத்தை இந்தியா எளிதாக வென்று விடும் என்ற ஓர் எண் ணம் நம்மிடையே இருந்து வந்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது அதிர்ச்சிக்குள்ளாக் கியுள்ளது,” என்றார் ராகுல். 
“இந்தத் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள இந்திய அணிக்கு இதுவே சரியான தருணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின் றனர். இந்நிலையில் ஆஸ்திரேலி யாவிடம் இந்தியா தோற்றது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட் (படம்), “இது இந்திய அணி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான எச்ச ரிக்கை மணி,” என்று கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சிக்காக ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலைவிட்டு வெளியேறும் இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jul 2019

சிங்கப்பூர் வந்தது இன்டர் மிலான் குழு