ஃபாரிஸ் ராம்லி கோலில் வாகை சூடிய லயன்ஸ் அணி

கோலாலம்பூர்: விறுவிறுப்பான, தாக்குதல் ஆட்டத்தைத் தருவேன் என்று சொல்வது எளிது. ஆனால், எதிரணியினரின் கோட்டைக்குள் சென்று வென்று வருவது என்பது கடினம். 
எனினும், நேற்று முன்தினம் நடைபெற்ற ‘ஏர்மரின்’ கிண்ண காற்பந்து போட்டியில் சிங்கப்பூரின் லயன்ஸ் அணி இதைத்தான் செய் தது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லயன்ஸ் அணி பந்தை தன் வசம் 48 விழுக்காடு நேரம் மட்டுமே வைத்திருந்தபோதிலும் கோல் போடக்கூடிய பல வாய்ப்பு களை உருவாக்கியது. 
அதில் ஆட்டத்தின் 83ஆம் நிமிடத்தில் கைருல் அம்ரி நான்கு மலேசிய வீரர்களைத் தாண்டிக் கொடுத்த பந்தை ஃபாரிஸ் ராம்லி மிக லாவகமாக மலேசிய கோல் காப்பாளரின் கைகளுக்கு எட்டா மல் கோல் போட்டு வெற்றி தேடித் தந்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் வீரர் ஃபெர்னான்டோ லோரெண்டே (இடமிருந்து மூன்றாவது) போட்ட கோல் சிட்டியின் அரையிறுதி கனவைத் தவிடுபொடியாக்கியது. படம்: ஏஎஃப்பி

19 Apr 2019

கார்டியோலா: கொடுமையான தோல்வி