ஏரன் ஃபிஞ்ச்: தேவைப்பட்டால் கீழ்வரிசையிலும் பந்தடிப்பேன்

மெல்பர்ன்: ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோரின் வருகையால் கீழ் வரிசையில் இறங்கி பந்தடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கும் தயார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஏரன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். 
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஓராண்டு தடையால் அனைத் துலகப் போட்டிகளில் விளையாட வில்லை. 
இதனால் ஏரன் ஃபிஞ்ச் அணித் தலைவராகப் பொறுப் பேற்றார். அத்துடன் தொடக்க வீரராகக் களம் இறங்கி பந்தடித்து வருகிறார்.
ஸ்மித், வார்னர் மீதான தடைக்காலம் இம்மாதம் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 
இதனால் உலகக் கிண்ணத் துக்கான ஆஸ்திரேலிய அணியில் இருவரும் விளையாட வாய்ப் புள்ளது. வார்னர் அணியில் இடம்பிடித்தால் தொடக்க வீரராகக் களம் இறங்குவார். ஸ்மித் மூன்றாவது வீரராகக் களம் இறங்குவார்.
இப்படி ஒரு சூழ்நிலை உருவாக, இருவருக்காகவும் கீழ்வரிசையில் களம் இறங்கி பந்தடிக்கத்  தயார் என்று ஏரன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.