சாதனை படைத்த கேன் வில்லியம்சன்

ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக் கெட் அணியின் தலைசிறந்த பந்தடிப்பாளராக கேன் வில்லி யம்சன் (படம்) மூன்றாவது முறை யாக சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லி யம்சன் இந்தத் தலைமுறையின் தலைசிறந்த பந்தடிப்பாளர்களில் ஒருவராகக்  கருதப்படுகிறார். 
இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்ளாதேஷ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
இந்தப் பருவத்தில் கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டி களில் 925 ஓட்டங்களும் ஒருநாள் போட்டிகளில் 838 ஓட்டங்களும் டி20 கிரிக்கெட்டில் 332 ஓட்டங்களும் அடித்துள்ளார்.
ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விருதுகள் வழங்கி கௌர விக்கிறது. மிக உயரிய விருதான சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை இந்த முறை கேன் வில்லியம்சன் வென்றுள்ளார்.
ஏற்கெனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ளார். இதன்மூலம் மூன்று முறை சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ராஸ் டெய்லர் இரண்டு முறை இந்த விருதைப் பெற்றுள்ளார்.