2020 ஐரோப்பியக் கிண்ணத் தகுதிச் சுற்று கனல் கக்கிய  தொடக்க ஆட்டங்கள்

ரோட்டர்டாம்: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக் கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
தொடக்க ஆட்டங்கள் மிகவும் விறுவிறுப்பான முறையில் கோல் மழை பொழிந்தன.
பெலரூஸ் குழுவை 4=0 எனும் கோல் கணக்கில் ஹாலந்து பந்தாடியது.
தாக்குதல் மேல் தாக்குதல் களை நடத்திய ஹாலந்து வீரர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெலரூஸ் ஆட்டக் காரர்கள் திக்குமுக்காடினர்.
இடைவேளையின்போது 2=0 எனும் கோல் கணக்கில் ஹாலந்து முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்கள் போட்டு பெலரூஸின் கதையை ஹாலந்து முடித்து வைத்தது.
ஒரு காலத்தில் காற்பந்து ஜாம்பவானாக திகழ்ந்த ஹாலந்து, அண்மையக் காலமாகப் பிரதான காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெற தவறியுள்ளது.
இம்முறை ஐரோப்பியக் கிண்ணப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற முனைப்புடன் அக்குழுவின் ஆட்டக்காரர்கள் களமிறங்கி அசத்தினர். 
ஹாலந்தின் இந்த அபார வெற்றி உலகமெங்கும் இருக்கும் அதன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் பெல் ஜியம் வாகை சூடியது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்திய ரஷ்யாவை அது 3=1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.