லண்டன்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் செக் குடியரசை 5-0 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து நேற்று தோற்கடித்தது. இங்கிலாந்துக்காக மூன்று கோல்கள் போட்டு, அக்குழுவின் வெற்றிக்கு வித்திட்டார் நட்சத்திர வீரர் ரஹீம் ஸ்டெர்லிங். ஆட்டம் தொடங்கியதிலிருந்து சொந்த மண்ணில் விளையாடும் முனைப்புடன் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கோல் மழை தொடங்கியது. பந்தை ஸ்டெர்லிங் வலைக்குள் சேர்த்தார். இடைவேளைக்குச் சில வினாடிகள் எஞ்சியிருந்தபோது இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவவிடாமல் கோல் போட்டார் ஹேரி கேன். இடைவேளையின்போது 2=0 எனும் கோல் கணக்கில் இங்கி லாந்து முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்திலும் இங்கி லாந்தின் கோல் பசி அடங்க வில்லை. ஆட்டத்தின் 62வது, 68வது நிமிடங்களில் அருமையான கோல் களைப் போட்டு இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார் ஸ்டெர்லிங். செக் குடியரசு ஆட்டக்காரர்கள் எவ்வளவு முயன்றும் அவர்களால் கோல் போட முடியாமல் போனது. மாறாக, ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் அக்குழு சொந்த கோல் போட்டது.
ஸ்டெர்லிங் ஹாட்ரிக்; இங்கிலாந்து அபார வெற்றி
1 mins read
இங்கிலாந்தின் மூன்றாவது கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங். (வலது படம்) போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் பந்து சென்றுவிடாதபடி பார்த்துக்கொள்ளும் உக்ரேன் வீரர்கள். படங்கள்: ராய்ட்டர்ஸ், இபிஏ -

