அர்ஜெண்டினா அதிர்ச்சித் தோல்வி

பியூனஸ் ஐரிஸ்: வெனிசுவே லாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற நட்புமுறைக் காற்பந்து ஆட்டத்தில் அர்ஜெண்டினா 3=1 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரான்ஸிடம் தோற்றதை அடுத்து, அர்ஜெண் டினா களமிறங்கியுள்ள ஆறு அனைத்துலக ஆட்டங்களில் லயனல் மெஸ்ஸி விளையாட வில்லை.
வெனிசுவேலாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்தான் அவர் அர்ஜெண்டினாவுக்காக மீண்டும் களமிறங்கினார். ஆனால் இந்த ஆட்டம் அவருக்கும் அர்ஜெண்டினா வுக்கும் ஒரு கெட்ட கனவாக அமைந்தது. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே வெனிசுவேலா கோல் போட்டு அரங்கில் கூடியி ருந்த அர்ஜெண்டினா ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இடைவேளைக்குக் கிட்டத் தட்ட ஒரு நிமிடம் இருந்தபோது வெனிசுவேலாவின் முரிலோ கோல் போட்டு தமது குழுவின் நிலையை வலுப்படுத்தினார்.
ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் மார்ட்டினேஸ் கோல் போட்டு வெனிசுவேலாவுடனான கோல் இடைவெளியைக் குறைத்தார். 
ஆனால் ஆட்டத்தைச் சமன் செய்ய அர்ஜெண்டினா கொண் டிருந்த கனவு ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் கலைந்தது.
கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் போட்ட வெனிசுவேலா வெற்றியை உறுதி செய்தது.