இளம் காற்பந்து வீரர்களை ஊக்குவிக்க பங்காளித்துவம்

சிங்கப்பூர்: தேசிய காற்பந்து முகவையான ‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ (ஸ்போர்ட்எஸ்ஜி) பிரபல ஜெர்மானிய காற்பந்துக் குழுவான ‘பயர்ன் மியூனிக்’குடன் மூன்றாண்டு கால பங்காளித் துவத்தை அறிவித்துள்ளது.
அனைத்துலுக அளவிலான இளையர் விளையாட்டுப் போட்டித் தொடரான எஃப்சி பயர்ன் இளையர் கிண்ணத்தை ஏற்று நடத்து வதிலும் பயிற்றுவிப்பாளர் பகிர்வு நடவடிக்கை,  வெளிநாட்டு கல்வித் திட்டங்கள் போன்றவற் றில் பங்கேற்பதிலும் இணைந்து பணியாற்ற இந்தப் பங்காளித்துவம் துணைபுரியும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் 16 விளை யாட்டாளர்கள் மே மாதம் நடைபெறும் பயர்ன் இளையர் உலகக் கிண்ண இறுதியாட்டங் களுக்காக மியூனிக் நகருக்குச் செல்வர்.
ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டுத் திடலில் நேற்றுக் காலை நடைபெற்ற 2019 எஃப்சி பேயன் சிங்கப்பூர் இளையர் கிண்ணப் போட்டி யின் இறுதி ஆட்டங்களின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காற்பந்து விளையாட்டில் சிங்கப்பூரர்கள் கொண்டிருக்கும் பேரார்வத்தைத் தாம் அறிந் திருப்பதாக பயர்ன் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோயர்க் வாக்கர் கூறினார். 
கடந்த 2017 ஜூலையில் நடைபெற்ற அனைத்துலக வெற்றியாளர் கிண்ண முன்பருவத்தின்போது சிங்கப்பூர் அதன் முதல் குழுவில் விளையாடிய விதத்திலிருந்தே தாம் இதனைத் தெரிந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த ஈராண்டு காலமாக காற்பந்து தொடர்பான ஒரேவித கருத்து பரிமாற்றத்தைச் செய்துகொண்டு வந்துள்ள நாங்கள், இப் போது ஸ்போர்ட்எஸ்ஜியுடன் இணைந்து பணி யாற்ற இருப்பதில் பெருமைகொள்கிறோம்,” என்று திரு வாக்கர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்போர்ட்எஸ்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரி லிம் டெக் யின் கூறுகையில், “எங்களது தற்போதைய விளையாட்டு நட வடிக்கைகளில் பொலிவை ஏற்படுத்த எஃப்சி பயர்னுடன நீண்டகாலப் பங்காளித்துவத்தை ஏற்படுத்தி இருப்பதில் மகிழ்வுகொள்கிறோம்,” என்றார்.
எஃப்சி பயர்ன் அமைப்பானது சிங்கப்பூரில் இளையர் காற்பந்து நடவடிக்கைகளை மேம் படுத்த விரிவாகவும் சாதகமான வழிகளிலும் பங்களிப்புச் செய்ய கடப்பாடு கொண்டுள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“திறமையான பல விளையாட்டாளர்களை உருவாக்கிய நீண்டகால சாதனை படைத் திருக்கும் இந்த காற்பந்துச் சங்கத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன,” என்றார் திரு லிம்.