சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி

சென்னை ஆடுகளம் மீது டோனி அதிருப்தி

1 mins read
d4d470a6-75cf-4c67-8941-9fdd83bc0bdc
புல்வாமா தாக்குதலில் மாண்ட வீரர்களின் குடும்பத்துக்கு நிதியளிப்பதற்கான காசோலையை சென்னையில் நேற்று முன்தினம் துணை ராணுவப் படை அதிகாரியிடம் சிஎஸ்கே அணித் தலைவர் டோனி வழங்கினார். படம்: ஏஎஃப்பி -

சென்னை: 12வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி (சிஎஸ்கே) பெங்களூரு (ஆர்சிபி) அணி யை எளிதாக வென்றது. முதலில் ஆடிய ஆர்சிபி 17.1 ஓவர்களில் 70 ஓட்டங் களையே குவிக்க முடிந்தது. அந்த எளிய இலக்கை 17.4 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது சிஎஸ்கே. பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய சிஎஸ்கே அணித் தலைவர் டோனி, சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தின் பராமரிப்புப் பற்றி அதிருப்தி தெரிவித்தார். "இப்படிப்பட்ட ஆடுகளத் தை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதுபோன்ற ஆடு களத்தில் எப்படி பந்தடிக்க முடியும்? பந்தடிப்பாளர்களுக்கு சாதகமில்லாமல் மெதுவாக பந் துகள் வருகின்றன. இதைப் பார்க்கும்போது கடந்த 2011 ஆம் ஆண்டு 'சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்' போட்டி ஆடு களம் நினைவுக்கு வருகிறது. "இதுபோன்ற ஆடுகளம் இருந்தால், எங்களுக்கும் பந்தடிக்கக் கடினமாகத்தான் இருக்கும். இப்போது சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகளம் இருந்தா லும் இன்னும் சிறப்பாக பரா மரிக்க வேண்டியது அவசியம்.