வெலன்சியா: ஐரோப்பிய கிண்ணக் காற்பந்து தகுதிச்சுற்று ஆட்டமொன் றில் நேற்று அதிகாலை ஸ்பெயினும் நார் வேயும் மோதின. இதில் ஆட்டத்தின் 71வது நிமிடத் தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி நார்வே கோல்காப்பாளர் எதிர்பார்க்காத வகையில் கோல் கம்பத்தின் நடுப் பகுதியில் பந்தை உதைத்து கோலாக்கி ஸ்பெயினுக்கு 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி தேடித்தந்தார் அந்நாட்டுத் தற் காப்பு ஆட்டக்காரரான செர்ஜியோ ரமோஸ். முன்னதாக, ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கில் போல்டன் குழுவிற்காக விளை யாடும் ரோட்ரிகோ என்ற வீரர் ஸ்பெயி னுக்கான முதல் கோலை போட்டார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் போர்ன்மத் குழு விற்கு விளையாடும் ஜோஷுவா கிங் என்பவர் நார்வே நாட்டுக்கு தமது பங் காக ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தார். இந்த நிலையில்தான், ஸ்பெயி னுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி நேர்த்தியாக கோல் போட்டார் செர்ஜியோ ரமோஸ். நேற்றைய ஆட்டத்தில் நார்வே கோல் கம்பத்தை நோக்கி 26 முறை பந்தை உதைத்த ஸ்பெயின் பல கோல் போடும் வாய்ப்புகளை வீணடித்தது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் செல்சி குழுவிற்காக விளையாடும் அல்வரோ மொராட்டா. எனினும், ஸ்பெயினுக்கு இவரால் தான் நல்லதொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. மற்றோர் ஆட்டத்தில் ஐந்து முறை உலகக் கிண்ணக் காற்பந்து விருதை வென்ற பிரேசிலை பனாமா 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் கட்டுப்படுத் தியது.ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் கோல் போட்டு முன்னிலை பெற்ற பிரேசிலால் அதை நான்கு நிமிடங் களுக்கு மேல் பாதுகாக்க முடியாமல் 36வது நிமிடத்தில் பனாமா தற்காப்பு ஆட்டக்காரரை கோல் போடவிட்டு வெற்றி பெறும் வாய்ப்பைப் பறிகொடுத் தது. பிற்பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டிக்கு விளையாடும் கேப்பிரியல் ஜிசஸ், வெஸ்ட் ஹேம் குழுவில் விளை யாடும் ஃபெலிப்பி ஆண்டர்சன் என மாற்று ஆட்டக்காரர்களை பிரே சில் களமிறக்கியும் வெற்றி வாய்ப்பு பறிபோனது போனதுதான்.
ஸ்பெயினுக்கு வரமாய் கிடைத்த 'பெனால்டி'
2 mins read
-

