அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி: ஜப்பானைப் பழிதீர்த்த மலேசியா

அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி: ஜப்பானைப் பழிதீர்த்த மலேசியா

1 mins read

ஈப்போ: அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் கடுமையாகப் போராடி ஜப்பானை 4=3 எனும் கோல் கணக்கில் மலேசியா தோற்கடித்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் தன்னை பெனால்டி ஃபிலிக்ஸ் மூலம் தோற்கடித்த ஜப்பானை மலேசியா பழிவாங்கியது. நேற்று முன்தினம் ஈப்போவில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இதுவே அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு இன்று இந்தியாவை மலேசியா சந்திக்கிறது. இந்தியாவை முறியடிக்க வேண்டுமாயின் மலேசியா அதன் தற்காப்பை பலப்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று கோல்கள் விட்டதுபோல இந்தியாவிடம் கோல்களை விட்டால் வெற்றி பெறுவது சிரமம். இந்தியாவும் மலேசியாவும் தற்போது இரண்டு ஆட்டங்களில் களமிறங்கி தலா நான்கு புள்ளிகள் பெற்றுள்ளன.