ஐபிஎல்: டெல்லி அணியிடம் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல்: டெல்லி அணியிடம் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ்

1 mins read

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. ரிஷப் பன்ட் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். டெல்லி அணி முதலில் பந்தடித்தது. ரிஷப் பன்ட் 18 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன் விளைவாக டெல்லி அணி 200 ஓட்டங்களை எளிதில் கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து மும்பை பந்தடித்தது. அணித் தலைவர் ரோகித் சர்மா 14 ஓட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 2 ஓட்டங்களிலும் குவிண்டன் டி காக் 27 ஓட்டங்களிலும் பொல்லார்ட் 21 ஓட்டங்களிலும் ஹார்திக் பாண்டியா ஓட்டம் ஏதுமின்றியும் நடையைக் கட்டினர். மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.