கடைசி நிமிட கோல்: வெற்றியை பறித்த ஜெர்மனி

ஆம்ஸ்டர்டாம்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக் கான தகுதிச் சுற்றில் ஜெர் மனிக்கும் ஹாலந்துக்கும் இடையே விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது.
ஹாலந்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் போட்டு வெற்றியைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது ஜெர்மனி.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தென்கொரியாவிடம் எதிர்பாராவிதமாக ஜெர்மனி தோற்று வெளியேறியதால் அதன்  பயிற்றுவிப்பாளர் ஜுவாகிம் லோஃப் கடுமையாக விமர்சிக் கப்பட்டார்.
நேற்றைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் அவருக்கு ஏற்பட்டிருந்த நெருக்கு தல்கள் குறைய வாய்ப்புள்ளது.
எதிரணியின் அரங்கில் விளையாடியபோதும் துளியளவும் பதற்றமின்றி ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
தாக்குதல் மீது தாக்குதல்களை நடத்தி ஹாலந்தை அது திணறடித்தது.
ஆட்டம் தொடங்கி இரண்டு நிமிடங்களில் ஜெர்மனியின் கினாப்ரி வலை நோக்கி அனுப்பிய பந்தை ஹாலந்து கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார்.
ஆனால் 15வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் போட்டது. இம்முறை லீரோய் சானே அனுப்பிய பந்தை ஹாலந்து கோல்காப்பாள
ரால் தடுக்க முடியாமல் போனது.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஜெர்மனி அதன் இரண்டாவது கோலைப் போட்டது.
கினாப்ரி அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் வளைந்து சென்று வலையைத் தீண்டியது.
இடைவேளையின்போது ஜெர் மனி 2=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் நிலைமை மாறியது. இம்முறை ஹாலந்து ஆதிக்கம் செலுத்தியது.
பிற்பாதி ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களில் ஹாலந்தின் டிலைட் கோல் போட்டு ஜெர்மனிக்கும் ஹாலந்துக்கும் உள்ள கோல் இடைவெளியைக் குறைத்தார்.
இந்த கோல் ஹாலந்துக்கு உத்வேகத்தைத் தர, ஆட்டத்தைச் சமன் செய்யும் முனைப்புடன் தொடர் தாக்குதல்களை அதன் வீரர்கள் நடத்தினர்.
ஹாலந்துக்குக் கிடைத்த சில கோல் வாய்ப்புகளை ஜெர்மனியின் கோல்காப்பாளர் நொயெர் மிக அருமையாக தடுத்து நிறுத்தினார்.
இருப்பினும், ஹாலந்தின் விடா முயற்சிக்கு ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் பலன் கிட்டியது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon