உலான்பாட்டோர்: ஆசியக் காற்பந்துச் சம்மேளத்தின் 23 வயதுக்கு உட்பட் டோருக்கான காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றில் மங்கோலியாவை 3-=1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் நேற்று தோற்கடித்தது. இது சிங்கப்பூரின் கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். மங்கோலியத் தலைநகர் உலான் பாட்டோரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை சிங்கப்பூரின் 22 வயதுக்கு உட்பட் டோருக்கான குழு கைப்பற்றியபோதிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் இறுதிச் சுற்றுக்கு அது தகுதி பெற தவறியது. மூன்று ஆட்டங்களில் சிங்கப்பூர் ஐந்து புள்ளிகளைப் பெற்றுள்ளது. தகுதிச் சுற்றின் முதல் இரண்டு ஆட்டங்களில் ஹாங்காங், வடகொரியா ஆகிய குழுக்களுடன் 1=1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் சமநிலை கண்டது. தகுதிச் சுற்றில் தோல்வி அடையா மலேயே இறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூர் தகுதி பெற தவறியிருப்பது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. தகுதிச் சுற்றின் 11 பிரிவுகளில் முதல் இடத்தைப் பிடித்த குழுக்களும் ஆகச் சிறப்பாகச் செயல்பட்ட நான்கு இரண்டாம் இடக் குழுக்களும் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. போட்டியை ஏற்று நடத்தும் தாய்லாந்தும் போட்டியிடுகிறது.
வெற்றி பெற்றும் சிங்கப்பூருக்கு ஏமாற்றம்
1 mins read

