போட்கொரிக்கா: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக் கான தகுதிச் சுற்றில் இங்கிலாந்து தொடர்ந்து கோல் மழை பொழிந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் செக் குடியரசை 5-0 எனும் கோல் கணக்கில் அது பந்தாடியது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மோண்ட்டிநேக்ரோவை 5-1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து புரட்டி எடுத்தது. சொந்த மண்ணில் விளையாடிய முனைப்பில் ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் மோண்ட்டிநேக்ரோ கோல் போட்டு முன்னிலை வகித் தது. ஆனால் இங்கிலாந்துக்கும் அதற்கும் தரம் அடிப்படையில் உள்ள பெரும் இடைவெளியை முற்பாதி ஆட்டத்திலேயே உணர முடிந்தது. மோண்ட்டிநேக்ரோ போட்ட கோல் இங்கிலாந்து வீரர்களை இம்மியளவும் பாதிக்கவில்லை. மாறாக, மிகுந்த நம்பிக்கையுடன் கோல் வேட்டையில் அவர்கள் தீவிரமாக இறங்கினர். 30வது நிமிடத்தில் மைக்கல் கீன் ஆட்டத்தைச் சமன் செய்தார். இடைவேளைக்கு முன்பு ரோஸ் பார்க்லி கோல் போட்டு இங்கிலாந்தை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். பிற்பாதியில் ஆட்டம் இங்கி லாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் பார்க்லி மீண்டும் கோல் போட்டு தமது குழுவின் நிலையை வலுப் படுத்தினார். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஹேரி கேனும் 81வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங்கும் இங்கிலாந் தின் நான்காவது மற்றும் ஐந்தாவது கோலைப் போட்டனர். இங்கிலாந்து இதுவரை 32 உலகக் கிண்ண, ஐரோப்பியக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் தோல்வி அடை யாமல் இருக்கிறது. இதற்கிடையே, ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர்களைக் குறிவைத்து விளையாட்டரங் கத்தில் கூடியிருந்த மோண்ட்டி நேக்ரோ ரசிகர்கள் இனவாதக் கருத்துகளை அள்ளி வீசினர். இதற்கு இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டெர்லிங்கும் கேலம் ஹட்சன்-ஒடோயும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றோர் ஆட்டத்தில் உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளர் பிரான்ஸ் 4-0 எனும் கோல் கணக்கில் ஐஸ்லாந்தைத் தோற் கடித்தது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் உமிடிட்டி பிரான்ஸின் முதல் கோலைப் போட்டார். இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் ஒலிவியே ஜிரூ கோல் போட்டார். இது அவரது 35வது அனைத்துலக ஆட்ட கோலாகும். பிரான்சுக்காக அதிக அனைத் துலக கோல்களைப் போட்ட வீரர் கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கிலியன் எம்பாப்பேயும் அன் டோய்ன் கிரீஸ்மனும் பிரான்ஸின் மூன்றாவது மற்றும் நான்காவது கோலைப் போட்டனர்.
போர்ச்சுகலுக்கு அடி மேல் அடி இதற்கிடையே, போர்ச்சுகல் தொடர்ந்து ஏமாற்றங்களைச் சந்தித்து வருகிறது. போர்ச்சுகல் அதன் முதல் ஆட்டத்தில் உக்ரேனுடன் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அது செர்பியாவுடன் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. தகுதிச் சுற்றில் போர்ச்சுகல் இதுவரை வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதன் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயமடைந்து ஆட்டத் திலிருந்து வெளியேறினார்.

