சுடச் சுடச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோற்கடித்தது.
பூவா தலையாவில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி பந்தடித்தது.  20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார். சர்ஃப்ராஸ் கான் 46 ஓட்டங்கள், மயங்க் அகர்வால் 22 ஓட்டங்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில், ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இதனையடுத்து, 185 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பில் ரகானே 27 ஓட்டங்கள், ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ஓட்டங்கள், சாம்சன் 30 ஓட்டங்கள், ஸ்டீவ் ஸ்மித் 20 ஓட்டங்கள் எடுத்தனர்.
பஞ்சாப் அணியில் சாம் கர்ரன், முஜிப், ராஜ்புட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon