த ஆலி: 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக் கான தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று மால்ட்டா குழுவை ஸ்பெயின் 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. மால்ட்டாவின் சொந்த அரங் கில் நடந்த இந்த ஆட்டத்தின் பெரும்பகுதியைத் தற்காப்பிலேயே கவனம் செலுத்திய மால்ட்டாவை கடந்து கோல் அடிப்பது சிரமமாக இருந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை ஸ்பெயின். ஆட்டத்தின் 31வது, 73வது நிமிடத்தில் ஸ்பெயின் இரு கோல்களையும் அட்லெட்டிகோ மட்ரிட் வீரர் அல்வாரோ மொராட்டா போட்டார். கடைசியாக நார்வே குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்ற ஸ்பெயினுக்கு இது இரண்டாவது வெற்றியாகும். டென்மார்க், சுவிட்சர்லாந்து குழுக்கள் பொருதிய மற்றோர் ஆட்டம் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந் தது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் டென்மார்க் மூன்று கோல்கள் பின்னிலையில் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு சுவிட்சர் லாந்தின் வெற்றியைத் தடுத்தது பெரிதும் எதிர்பாராதது. பத்து நிமிட இடைவெளியில் டென்மார்க் மூன்று கோல் களையும் போட்டு சமன் செய்தது. மற்றோர் தகுதிச் சுற்று ஆட்டத்தில் கடந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறாத இத்தாலி, லிக்டென்ஸ்டைன் குழுவை 6-0 எனும் கோல் கணக்கில் புரட்டிப் போட்டது. மறுமலர்ச்சி கண்டுவரும் இத்தாலியின் இரு கோல்களை போட்டார் 36 வயது ஃபாபியோ குவையெரெல்லா. இதன்மூலம் ஆட்டத்தில் கோலடித்த இத்தா லியின் ஆக வயதான ஆட்டக் காரர் என்ற பெருமையைப் பெற்று உள்ளார் அவர்.
ஐரோப்பியக் கிண்ண தகுதிச் சுற்று: ஸ்பெயின், இத்தாலி வெற்றி
2 mins read

