சிஎஸ்கே வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு

சிஎஸ்கே வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு

1 mins read

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தி யாசத்தில் வென்றது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி பந்து வீச்சாளர்களைப் பாராட்டியுள்ளார். நடப்பு வெற்றியாளரான சிஎஸ்கே அணி டெல்லியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த டெல்லி அணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே இரு பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 148 ஓட்ட இலக்கை எட்டியது. அந்த அணி 19.4 ஓவர்களில் நான்கு விக்கெட் டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்து வென்றது. சிஎஸ்கே பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது. டெல்லி ஆடுகளத்தில் பந்து எதிர்பார்த்த தைவிட வேகமாக திரும்பியதாக டோனி சொன்னார். இரண்டாவது இன்னிங்சில் பந்தடிப்புக்கு ஏற்ற வகையில் பனித் துளி போதுமான அளவுக்கு இருந்ததாக அவர் கூறினார். "பந்து வீச்சாளர்களின் பணி பாராட்டுக்குரியது. டெல்லி யை 147 ஒட்டங்களுக்குள் கட்டுப் படுத்தி அவர்கள் சிறப்பாக செயல் பட்டனர்.