7 பந்தில் 7 சிக்ஸர்: யுவராஜை முந்திய 23 வயது இளைஞர்

7 பந்தில் 7 சிக்ஸர்: யுவராஜை முந்திய 23 வயது இளைஞர்

1 mins read
08005562-f164-46fa-b1d0-40ac03536d49
-

மும்பை: ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடிக்கும் வகையில் மும்பையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மகரந்த் பட்டேல் (படம்) ஏழு பந்துகளில் ஏழு சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். மும்பையில் சச்சின் டெண்டுல்கர் ஜிம்கானா மைதானத்தில் எஃப் பிரிவு டைம்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் விவா சூப்பர் மார்க்கெட் அணியும் மகேந்திரா லாஜிஸ்டிக் அணியும் மோதின. இதில் விவா சூப்பர் மார்க்கெட் அணிக்காக விளையாடிய மகரந்த் பட்டேல், ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்ததோடு, அடுத்த ஓவரில் அவர் பந்தடித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்து 7 பந்தில் 7 சிக்ஸர்களை அடித்து சாதனை புரிந்துள்ளார். படம்: இணையம்