அபுதாபி: ஆஸ்திரேலியா- பாகிஸ் தான் அணிகள் மோதிய மூன்றா வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய ஆஸ்தி ரேலிய அணி 50 ஓவரில் 6 விக் கெட் இழப்புக்கு 266 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் 'ஹாட்ரிக்' சாதனை வாய்ப் பைத் தவற விட்டார். முதல் ஆட்டத்தில் 116 ஓட்டங்களையும் இரண்டாவது ஆட்டத்தில் 153 ஓட்டங்களையும் குவித்த அவர், இந்த ஆட்டத்தில் 90 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 71 ஓட்டங்களும் (8 பவுண்டரி, ஒரு சிக்ஸர்), ஹேண்ட்ஸ் ஹோம் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா
1 mins read

