ரசல், நிதிஷ் ரானாவுக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு

ரசல், நிதிஷ் ரானாவுக்கு தினேஷ் கார்த்திக் பாராட்டு

1 mins read
7010bcba-a46a-4b6a-8e1a-0abfa62fe247
-

கோல்கத்தா: ஐபிஎல் போட்டியில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது. கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட் டத்தில் முதலில் விளையாடிய கோல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங் கள் குவித்தது. இது கோல்கத்தா அணி பெற்ற இரண்டாவது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றி குறித்து கோல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: "இந்தப் போட்டியின் தொடக் கமே எங்களுக்குச் சிறப்பாக இருந்தது. ரசலின் அதிரடி ஆட் டத்துடன் நிதிஷ் ரசனா, உத்தப்பா ஆகியோரின் அபார ஆட்டமும் வெற்றிக்கு வழிவகுத்தது "காயத்தில் இருந்து குண மடைந்த சுனில் நரேன் திரும்பி இருக்கிறார். அவர் எப்போதுமே சவாலாக இருந்தார்," என்றார்.