லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட்டின் நிரந்தர நிர்வாகியாக ஒலே குனார் கோல்சியார் நியமிக் கப்பட்டுள்ளார். மேன்யூவின் முன்னாள் தாக் குதல் ஆட்டக்காரரான சோல்சி யார், கடந்த டிசம்பர் மாதம் முன் னாள் நிர்வாகி ஜோசெ மொரின் யோவுக்கு பதிலாக தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அவர் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து யுனைடெட் குழு அபாரமாக விளையாடத் தொடங்கியது. இதற்கு அடையாளமாக அது சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் காலிறுதிக்கு தகுதி பெற்றதுடன் பிரிமியர் லீக் தர வரிசையில் நான்காம் இடத்தைப் பெறுவதற்கு முனைப்புடன் போராடி வருவது குறிப்பிடத்தக் கது. சோல்சியார் நிர்வாகியாகப் பொறுப்பேற்றதிலிருந்து மான் செஸ்டர் யுனைடெட் விளையாடிய 19 ஆட்டங்களில், 14ல் வெற்றி பெற்று, இரண்டு ஆட்டங்களில் சமநிலை கண்டு, மூன்று ஆட்டங் களில் தோல்வியைத் தழுவியுள் ளது. இதற்கு முன் நார்வேயின் மோல்ட குழுவை நிர்வகித்த சோல்சியார் அந்தக் குழு இரண்டு விருதுகள் வெல்லக் காரணமாக இருந்தவர். மான்செஸ்டர் யுனை டெட்டின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து சர் அலெக்ஸ் ஃபெர் குசன் விலகிய பின் அந்தக் குழு வுக்கு நியமிக்கப்படும் நான்காவது நிரந்தர நிர்வாகியாகிறார் ஒலே குனார் சோல்சியார்.
மேன்யூவின் நிரந்தர நிர்வாகி சோல்சியார்
1 mins read
ஒலே குனார் கோல்சியார். படம்: ஏஎஃப்பி -

