லீக் பட்டத்துக்குக் குறி: சூடுபிடிக்கும் போட்டி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி பட்டத்தைக் கைப்பற்ற லிவர்பூலுக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
31 ஆட்டங்கள் விளையாடி 76 புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் முன்னிலை வகிக் கிறது லிவர்பூல்.
30 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள சிட்டி, 74 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இன்றிரவு ஃபுல்ஹம் குழுவை சிட்டி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் சிட்டி வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப் படுகிறது. சிட்டி வெற்றி பெற்றால் பட்டியலின் முதல் இடத்துக்கு முன்னேறும்.
இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிராக நாளை நடைபெறும் ஆட்டத்தில் இரண்டாவது நிலையில் இருந்தவாறு லிவர்பூல் விளையாடும்.
இந்த ஆட்டத்தில் லிவர்பூல் தோல்வி அடைந்தால் சிட்டிக்கு சாதகமாகிவிடும்.
விலர்பூலுக்கு எஞ்சியிருக்கும் ஆட்டங் களில் நாளைய ஆட்டம்தான் ஆக சவால்மிக்கதாக இருக்கும் என்று நம்பப் படுகிறது. லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவை யர்கன் கிளோப்பின் படை நாளை தோற்கடித்தால் அது அக்குழுவின் பட்டம் வெல்லும் வாய்ப்புகளை வலுவாக்கும்.
ஆனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற லிவர்பூல் கடுமையாகப் போராட வேண்டி வரும். லீக் பட்டத்தை வெல்ல முடியாமல் போனாலும் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வந்து அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற ஸ்பர்ஸ் முனைப்புடன் உள்ளது. அண்மைய ஆட்டங்களில் ஸ்பர்ஸ் ஏமாற்றங்களைச் சந்தித்து வருகிறது.
நான்காவது இடத்தில் இருக்கும் ஆர்சனலும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்டும் ஸ்பர்ஸ் குழுவுக்கு நெருக்குதலை அளிக்கின்றன.
எனவே முதல் நான்கு இடங்களில் போட்டியை முடிக்க வேண்டுமாயின் அடுத்து வரும் ஆட்டங்களில் ஸ்பர்ஸ் வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டும்.
இப்படி ஒரு நிலை இருக்க நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றியை இலக் காகக் கொண்டு களமிறங்கும் ஸ்பர்ஸ் குழுவை முறியடிக்க விலர்பூல் விழிப்புடன் இருந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
கால் எலும்பு முறிவு காரணமாக ஏறத்தாழ நான்கு மாதங்களுக்கு விளையாடாமல் இருந்த விலர்பூலின் ஜோ கொமேஸ் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பி உள்ளார்.
அதேபோல காயமடைந்திருந்த ஷெர்டன் ஷகிரி குணமடைந்துவிட்டார்.
லிவர்பூலும் ஸ்பர்ஸ் குழுவும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இதுவரை 53 முறை சந்தித்துள்ளன. அவற்றில் லிவர்பூல் 24 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 14 ஆட்டங்களில் ஸ்பர்ஸ் வெற்றி பெற்றது.
15 ஆட்டங்கள் சமநிலையில் முடிந்தன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லிவர்பூலும் ஸ்பர்ஸ் குழுவும் சந்தித்துக் கொண்டபோது 2-1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வாகை சூடியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!