துபாய்: ஆஸ்திரேலியா- பாகிஸ் தான் அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் பகல்=இரவாக நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பந்தடித்த ஆஸ்தி ரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 82 பந்துகளில் 98 ஓட்டங்களும் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), உஸ்மான் கவாஜா 62 ஓட்டங்களும், அலெக்ஸ் கேரி 55 ஓட்டங்களும் எடுத்தனர். இமாத்வாசிம், முகம்மது ஹஸ்னர், யாஷீர் ஷா தலா 2 விக்கெட்டு களைக் கைப்பற்றினார்கள். 278 ஓட்ட இலக்குடன் பாகிஸ் தான் பந்தடித்தது. 16.3 ஓவர்களில் 74 ஓட்டங்கள் எடுத்து அந்த அணி இரு விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது விக்கெட் டான ஆபித் அலி=முகம்மது ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளை யாடியது. இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர். ஆபித் அலி 112 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இரண்டாவது பந்தில் 104 ஓட்டங்கள் எடுத்த முகம்மது ரிஸ்வான் ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ஓட்டங்கள் மட்டும் எடுத்து 6 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் தோற்றது.
ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பாகிஸ்தான்
1 mins read

