சென்னை: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் டேவிட் வில்லி இடம் பெற்றிருந்தார். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் அவர் அணியுடன் இணைவது தாமதம் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், குடும்ப விஷயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார். ஏற்கெனவே காயத்தால் நிகிடி ஆட முடியாத நிலையில், சென்னை அணிக்கு இன்னொரு பின்னடைவாக டேவிட் வில்லியும் விலகி இருக்கிறார்.
சென்னை அணியிலிருந்து டேவிட் வில்லி விலகல்
1 mins read

