ராஜஸ்தானை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ராஜஸ்தானை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2 mins read
621d6045-feed-4989-8431-08b791dfbb11
பந்தடிக்கும் ஹைதராபாத்தின் ஜானி போர்ஸ்டாவ். படம்: ஏஎஃப்பி -

ஹைதராபாத்: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 199 ஓட்டங்கள் இலக்கை விரட்டிப்பிடித்துவாகை சூடியது. ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அடித்த சதம் இறுதியில் பயனில்லாமல் போனது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் = ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி கள் மோதின. ஹைதராபாத் அணியில் இரு மாற்றமாக ஷகிப் அல்-ஹசன், தீபக் ஹூடா நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன், ஷபாஸ் நதீம் ஆகியோர் சேர்க்கப் பட்டனர். பூவா தலையாவில் வென்ற ராஜஸ்தான் அணித் தலைவர் ரகானே பந்தடிப்பைத் தேர்வு செய்தார். அதன்படி ஜோஸ் பட்லரும் ரகானேவும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர். ஹைதராபாத் பந்தடிப்பாளர்கள் வீசிய பந்துகள் ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் பிரச்சினை யைக் கொடுத்தது. ஜோஸ் பட்லர் 5 ஓட்டங்களில் ர‌ஷித் கானின் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன், ரகானேவுடன் இணைந்து பந்தடித்தார். பவர்=பிளேயான முதல் 6 ஓவர்களில் ராஜஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 35 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு ஓட்ட வேகத்தை இருவரும் அதிகரித்தனர். நதீம், சித்தார்த் கவுல் ஓவர்களில் சாம்சன் சிக்சரைப் பறக்க விட்டார். ரகானேவும் பந்துகளை எல்லைக் கோட்டிற்கு விரட்டியடித்தார். 11.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ஓட்டங்களைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 134 ஓட்டங்களாக உயர்ந்தபோது ரகானே 70 ஓட்டங்களில் (49 பந்துகள், 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) பந்தைத் தூக்கி அடித்துக் ஆட்டமிழந்தார். அடுத்து ஆல்=ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். மறுமுனையில் சஞ்சு சாம்சன் ஹைதராபாத்தின் பந்துவீச்சை மிக அருமையாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தார். அவர் கடைசி ஓவரில் பவுண்டரி விளாசி தனது ஐபிஎல் போட்டியில் தமது இரண்டாவது சதத்தை எட்டினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ் தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 102 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 16 ஓட்டங் களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 199 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பந்தடிக்கத் தொடங்கிய ஹைதராபாத் அணி, ஓட்டங்களை குவித்தது. ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்பருவத்தில் ஹைதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும்.