இலங்கை கிரிக்கெட் வீரர் டிமுத் கைது

இலங்கை கிரிக்கெட் வீரர் டிமுத் கைது

1 mins read
0bed0858-48f5-438b-bb0d-bc9f70b15753
-
Google News Preferred Icon

கொழும்பு: இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான டிமுத் கருணாரத்னே (படம்), மது அருந்திவிட்டு போதையில் வாக னம் ஓட்டியதாகக் கைது செய்யப் பட்டார். இலங்கைத் தலைநகர் கொழும் பில் வாகனம் ஓட்டிச் சென்ற கரு ணாரத்னே, மூன்று சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதினார். இந்த விபத்தில் காயமடைந்த மூன்று சக்கர வாகனத்தின் ஓட்டு நர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இந்த விபத்து தொடர் பாக கைது செய்யப்பட்ட கருணா ரத்னே பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார். அடுத்த வாரத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலை யாவார் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இலங்கை கிரிக்கெட் வாரியத்திலும் அவர் மீது நட வடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.