மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது மான்செஸ்டர் சிட்டி

மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது மான்செஸ்டர் சிட்டி

2 mins read
27dec791-10b1-4bfc-8d6f-acc1bb1943c3
நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஒட்டாமெண்டே (நடுவில் 30 எண்கொண்ட கருநீல சீருடையில்) கோல்காப்பாளருடனும் ஃபுல்ஹம் தற்காப்பு ஆட்டக்காரர் ஒருவருடனும் மோதும் காட்சி. படம்: இபிஏ  -

இங்கிலாந்து: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நேற்று முன்தினம் ஃபுல்ஹம் குழுவை எதிர்கொண்ட மான்செஸ்டர் சிட்டி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. ஃபுல்ஹம் குழுவை மிக எளிதில் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரிமியர் லீக் தரவரிசையின் முதலிடத்துக்கு முந்தியது சிட்டி குழு. ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே சிட்டி தனது முதல் கோலை போட அதன்பின், இதுவரை நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டங்களில் மொத்த்தம் 72 கோல்களை விட்டுக்கொடுத்துள்ள ஃபுல்ஹம், மீளவே இல்லை. ஃபுல்ஹம் கோல் கம்பத்துக்கு 25 மீட்டர் தள்ளியிருந்து சிட்டியின் பெர்னார்டோ சில்வா அடித்த பந்து கோல் வலையின் இடது கோடியில் விழுந்து கோலானது. ஆட்டத்தின் முதல் 15 நிமிடங் களிலேயே ஃபுல்ஹம் கோல் கம் பத்தை நோக்கி 10 முறை பந்தை செலுத்திய விதமே மான்செஸ்டர் சிட்டியின் அபார ஆதிக்கத்தை பறைசாற்றியதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. மறுபுறம் ஃபுல்ஹம் தற்காப்பு ஆட்டக்காரர்களின் மோசமான ஆட்டமே அந்தக் குழுவுக்கு எதிராக கோல்கள் விழக் காரண மாக இருந்துள்ளது. முதல் கோலுக்கு ஃபுல்ஹமின் டிம் ஃபோசு மென்சா காரண மென்றால் இரண்டாவது கோல் ஜோ பிரயன் என்பவரின் தவற்றால் நேர்ந்தது. அதே வேளை ஸ்காட் பார்க்கர் நிர்வாகியாக உள்ள ஃபுல்ஹம் குழு சிட்டி கோல் கம்பத்தை நோக்கி ஒரு முறைகூட பந்தை உதைக்கவில்லை என்று பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது. நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்து பிரிமியர் லீக் தரவரிசை யில் முதலிடத்துக்கு லிவர்பூல் அணியைவிட கூடுதலாக ஒரு புள்ளி பெற்று மான்செஸ்டர் சிட்டி குழு முன்னேறியது. அதே சமயம், ஃபுல்ஹம் குழு தரவரிசையில் கடைசி இரண்டாவது இடத்தில் உள்ளது. சிட்டியின் தாக்குதல் ஆட்டக் காரரான செர்ஜியோ அகுவேரோ தமது அணியின் இரண்டாவது கோலை 27வது நிமிடத்தில் போட அதற்குமேல் ஃபுல்ஹம் குழுவால் போராடி வெற்றிபெறும் நிலை யில்லை என்பது உறுதியானது. பிரிமியர் லீக்கில் இதுவரை 19 கோல்கள் போட்டு சாதனை மன்னனாக விளங்கும் அகுவேரோ, சிட்டியின் முதல் கோலுக்கு டிம் ஃபோசு மென்சாவின் தவற்றைப் பயன்படுத்திக் கொண்டு பெர்னார்டோ சில்வாவுக்கு பந்தை கொடுத்த விதம் அற்புதம் என்று வர்ணிக்கப்படுகிறது.