பாகிஸ்தானை ஐந்து ஆட்டங்களிலும் தோற்கடித்த ஆஸ்திரேலிய அணி

துபாய்: ஆஸ்திரேலியா=பாகிஸ்தான் அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று பகல்=இரவாக நடைபெற்றது. 
முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ஓட்டங்களைக் குவித்தது.
தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 98 ஓட்டங்களும் மேக்ஸ்வெல் 70 ஓட்டங்களும் ஷான் மார்ஷ் 61 ஓட்டங்களும் எடுத்தனர். உஸ்மான் சின்வாரி 4 விக்கெட்டுகளையும் ஜூனைத் கான் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் பந்தடித்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் சொகைல் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது. அவர் 130 ஓட்டங்களும் தொடக்க வீரர் மசூத், இமாத் வாசிக் தலா 50 ஓட்டங்களுக் எடுத்தனர். பெகரன் டார்ப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணி 5 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. ஆஸ்திரேலியா 5 ஆட்டத்திலும் வெற்றுபெற்று 5-0 எனும் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon